/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் சேதம்: இரவில் சமூகவிரோதிகள் நடமாட்டம்
/
அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் சேதம்: இரவில் சமூகவிரோதிகள் நடமாட்டம்
அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் சேதம்: இரவில் சமூகவிரோதிகள் நடமாட்டம்
அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் சேதம்: இரவில் சமூகவிரோதிகள் நடமாட்டம்
ADDED : ஆக 07, 2025 07:44 PM

கூடலுார்:
கூடலுார் நடுகாணி அருகே உள்ள, பொன்னுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி; அரசு உயர்நிலைப்பள்ளி ஒரே இடத்தில் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியை சுற்றி பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர்.
இதன் மூலம், பள்ளி விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் வெளிநபர்கள், கால்நடைகள் பள்ளி வளாகத்துக்குள் நுழைவது தடுக்கப்பட்டது.
இந்நிலையில், சில இடங்களில் சுற்றுச் சுவர் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
பெற்றோர் கூறுகையில், 'பள்ளி வளாகத்தில் வெளி நபர்கள் மற்றும் கால்நடைகள் நுழைவதை தடுக்க அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்து பராமரிப்பின்றி உள்ளது.
இதனால், விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் உள்ளே சென்று வருவதாக புகார் உள்ளது. இதனை தடுக்க பள்ளி சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும்,' என்றனர்.