/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
/
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ADDED : பிப் 05, 2026 06:25 AM

குன்னுார்: குன்னுார் அந்தோணியார் பள்ளி அரங்கில் அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அதில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் நடந்த, 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மேலும், 'என் கனவு, என் எதிர்காலம்' இணைய தளம் துவக்கி வைத்து, மாநில முதல்வர் பங்கேற்று பேசிய தகவல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கிய அரசு கொறடா ராமச்சந்திரன் பேசுகையில்,''கடந்த,1968ல் சமுதாய திட்டம் துவங்கப்பட்டு நல திட்டங்கள் கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஆட்சியில், நிதி நிலை காரணம் காட்டி ஓய்வூதியம் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டது. தற்போது ஏழை எளிய மக்களுக்காக சமூக நல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஏற்கனவே, 29 ஆயிரத்து 31 பேருக்கு, ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 8 ஆயிரத்து 271 மனுக்கள் - பெறப்பட்டன. 3,868 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 32,899 பேருக்கு சமூக நல உதவித் திட்டம் பயன் பெற்றுள்ளனர். மனுக்கள் ஆய்வு பணிகள் முடிந்ததும் மற்றவர்களுக்கும் வழங்கப்படும்,'' என்றார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
கூடுதல் கலெக்டர் சங்கீதா. நகராட்சி தலைவர் சுசிலா, துணைத் தலைவர் வாசிம் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

