sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு பஸ் 'எக்ஸ்பிரஸ்' கட்டண விவகாரத்தில்...ஐகோர்ட் உத்தரவு மீ றல்! சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ., உறுதி

/

அரசு பஸ் 'எக்ஸ்பிரஸ்' கட்டண விவகாரத்தில்...ஐகோர்ட் உத்தரவு மீ றல்! சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ., உறுதி

அரசு பஸ் 'எக்ஸ்பிரஸ்' கட்டண விவகாரத்தில்...ஐகோர்ட் உத்தரவு மீ றல்! சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ., உறுதி

அரசு பஸ் 'எக்ஸ்பிரஸ்' கட்டண விவகாரத்தில்...ஐகோர்ட் உத்தரவு மீ றல்! சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ., உறுதி


ADDED : மார் 20, 2024 01:02 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும், அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் தடை விதித்த போதும், உத்தரவை மீறி கட்டணம் வசூல் செய்து வருவதால் பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.

'நீலகிரி மாவட்டத்தில் இருந்து, உள்ளூர் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு, 349 வழித்தடங்களில் இயங்கும் அரசு பஸ்கள், சாதாரண கட்டணத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்,' என, வட்டார போக்குவரத்து அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

அதனை மீறி, அரசு போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக விதிகளை மீறி, 'எக்ஸ்பிரஸ்' பஸ்களுக்கான கட்டணத்தை மக்களிடம் வசூலிக்கிறது.

இது தொடர்பாக, மலை மாவட்ட நுகர்வோர் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. கடந்த, 2019ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. பல்வேறு விசாரணைகளுக்கு பின், கடந்த பிப்., மாத இறுதியில் வழக்கிற்கான தீர்ப்பு வழக்கப்பட்டது. அதில், 'நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்க கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டது. எனினும், கோர்ட் உத்தரவை மதிக்காமல் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

பயணிகளுக்கு விழிப்புணர்வு


இந்நிலையில், உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பஸ்களில், 'விதிகளுக்கு புறம்பாக முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பயணிகள் புகார் தெரிவிக்க வேண்டும்,' என, பல்வேறு அமைப்புகள் சார்பில், ஊட்டி, குன்னுார், அருவங்காடு, கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில், பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மீண்டும் சட்ட பூர்வ நடவடிக்கை


இது குறித்து, லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,'' எக்ஸ்பிரஸ் பஸ்கள் என்பது, 80 கி.மீ., துாரத்துக்கு மேல் இயக்க வேண்டும். 25 கி.மீ.,க்குள் 'ஸ்டாப்' இருக்க கூடாது. இது நீலகிரி மாவட்டத்துக்கு பெருந்தாது.

இந்நிலையில்,நீலகிரியில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் இயங்கும், 335 பஸ்கள் சாதாரண கட்டண பஸ்கள் என கூறியபோதும், 175 பஸ்களில், 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்கிறது. இது தொடர்பாக ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது.

'இங்கு எக்ஸ்பிரஸ் பஸ்கள் இயக்க அனுமதி இல்லை,' என, வட்டார போக்குவரத்து அலுவலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை தொடர்ந்து, 'அனைத்து பஸ்களிலும் சாதாரண கட்டணம் வசூலிக்கவும்; எக்ஸ்பிரஸ் பஸ்கள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்,' எனவும், ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

எனவே, கோர்ட் உத்தரவு மீறி பயணிகளிடம் அரசு போக்குவரத்து கழகம் எக்ஸ்பிரஸ் கட்டண வசூலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும்,''என்றார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில்,''நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அரசு பஸ்களில் கூடுதல்கட்டணம் வசூலிக்க கூடாது.

உடனடியாக பரிசோதகரை நியமித்து, குறிப்பிட்ட அரசு பஸ்களில் ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து, மாவட்ட கலெக்டருக்கு தகவல் அனுப்பி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us