/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மத்திய அரசு நடத்திய தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
மத்திய அரசு நடத்திய தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
மத்திய அரசு நடத்திய தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
மத்திய அரசு நடத்திய தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : மார் 04, 2024 11:51 PM
மேட்டுப்பாளையம்;மத்திய அரசு நடத்திய தேசிய திறன் போட்டி தேர்வில், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த, இரண்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை போட்டி (எண்.எம்.எம்.எஸ்.) தேர்வை நடத்தி வருகிறது.
இதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஏராளமான மாணவ, மாணவியர் தேர்வை எழுதினர்.
சிறுமுகையை அடுத்த மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த மாணவன் மதன், மாணவி நர்மதா ஆகிய இருவரும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றனர்.
இந்த மாணவர்கள் இருவருக்கும், மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை மொத்தமாக, 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். போட்டி தேர்வில் வெற்றி பெற்ற இந்த மாணவர்களை காரமடை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சிவசங்கரி, பள்ளி தலைமை ஆசிரியை பத்திரம்மாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

