தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நெல்லியம்பதியில் பிரம்மாண்ட நுழைவு வாயில் அமைப்பு

நெல்லியம்பதியில் பிரம்மாண்ட நுழைவு வாயில் அமைப்பு

நெல்லியம்பதியில் பிரம்மாண்ட நுழைவு வாயில் அமைப்பு


ADDED : செப் 28, 2026 05:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு: நெல்லியம்பதி மலைத்தொடரின் இயற்கை எழிலைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில், போத்துண்டியில் பிரம்மாண்டமான வரவேற்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.

பாலக்காடு மாவட்டத்தில் சுற்றுலா தளங்களில் ஒன்றான நெல்லியம்பதிக்குச் செல்லும் ஒரே பாதையான போத்துண்டி சாலையில், வனத்துறையின் சோதனைச்சாவடிக்கு அருகே, கேரளாவின் மாநிலப்பறவையான இருவாச்சிப் பறவையின் வடிவில் வரவேற்பு வளைவு கட்டப்படுகிறது.

சுற்றுலா வாய்ப்புகளை மக்களிடையே பிரபலப்படுத்தி, அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக அங்கு பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 40 அடி அகலத்திலும், 22 அடிக்கு மேலான உயரத்திலும், நெல்லியம்பதி மலைப்பாதையின் தொடக்கத்தில் அமையவுள்ள இந்த இருவாச்சி நுழைவு வாயிலை, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய ‘செல்பி பாயிண்ட்’ ஆக மாற்ற வனத்துறை திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us