/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் மயான பிரச்னை; போலீசார் விசாரணை
/
கோத்தகிரியில் மயான பிரச்னை; போலீசார் விசாரணை
ADDED : நவ 05, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி; கோத்தகிரி பில்லிக்கம்பை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம மக்கள் குறிப்பிட்ட இடத்தை, 40 ஆண்டுகளுக்கு மேலாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர், 'மயானமாக பயன்படுத்தி வரும் நிலம் தனக்கு சொந்தம்; குறிப்பிட்ட நிலத்தை மீட்டுத் தர வேண்டும்,' என, கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, கிராம மக்களை அழைத்து விசாரணை செய்ததுடன், நிலத்திற்கான ஆவணங்களை பெற்று, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

