ADDED : செப் 02, 2026 05:02 PM
கோத்தகிரி: கோத்தகிரி அரவேனு மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பசுமை திறன் பயிற்சி துவக்கப்பட்டது.
கோவையில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும், வன மரபியல் மற்றும் வன மரபெருக்கு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் சார்பில், அக்., 16ம் தேதி வரை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுவரும் பயிற்சியை, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரேகா வாரியர் கோத்தகிரி அரவேனு பகுதியில் துவக்கி வைத்தார்.
அனைவரையும் தொழில் முனைவோர்களாக மாற்றுவதே இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். இந்த பயிற்சி முகாமில், மகளிர் திட்டம் குறித்து தினேஷ்குமார் பேசினார்.
இதில், முனைவர் விக்னேஸ்வரன், மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல் அலுவலர் முனைவர் வாமதேவன் உட்பட, மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
