/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புவி வெப்பத்தை கட்டுப்படுத்த பசுமை பரப்பு அவசியம்; பள்ளியில் நடந்த கருத்தரங்கில் தகவல்
/
புவி வெப்பத்தை கட்டுப்படுத்த பசுமை பரப்பு அவசியம்; பள்ளியில் நடந்த கருத்தரங்கில் தகவல்
புவி வெப்பத்தை கட்டுப்படுத்த பசுமை பரப்பு அவசியம்; பள்ளியில் நடந்த கருத்தரங்கில் தகவல்
புவி வெப்பத்தை கட்டுப்படுத்த பசுமை பரப்பு அவசியம்; பள்ளியில் நடந்த கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜூன் 16, 2025 08:12 PM

ஊட்டி; ஊட்டி புனித தெரசா பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன் ஸ்டான்லி தலைமை வகித்தார்.தேசிய பசுமை படை திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால், இயற்கையின் சீற்றத்தில் இருந்து விடுபடலாம்.
காலநிலை மாற்றம் என்பது, நாம் இயற்கையோடு போரிட்டதால் ஏற்பட்ட விளைவு. எளிமையான வாழ்க்கை முறை இயற்கை பாதுகாப்புக்கு சிறந்த வழியாகும்,'' என்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூபங்கேற்று பேசியதாவது: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் அறிவியலின் பங்கு முக்கியம். எல்.இ.டி., பல்புகள் கண்டுபிடித்ததன் மூலம், பழைய குண்டு பல்புகள் விலக்கப்பட்டு, மின் ஆற்றல்கள்சேமிக்கப்பட்டது. 'ஓசோன் படலத்தின் ஓட்டை காரணமாக, புற ஊதா கதிர்கள் பூமியில் விழுந்து மக்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும்,' என, உலகெங்கும் பீதி ஏற்பட்டது.
ஓசோன் படலத்தின் ஓட்டை ஏற்பட, குளிர்சாதன பெட்டிகளில் இருந்து விடபட்ட 'குளோரோ புளோரோ கார்பன் என்ற வேதிப்பொருள்கள் தான் காரணம் என கண்டறிந்து, அதற்கு மாற்று தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதன் காரணமாக, ஓசோன் ஓட்டை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அமில மழை தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் நைட்ரஸ் ஆக்சைடு என்ற வேதிப்பொருள் தான் காரணம் என கண்டறிந்து, அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்தியதால்,அமில மழை பெய்யவில்லை.
புவிவெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில், காற்று மண்டலத்தின் ' ஸ்டிரே டோஸ்பியர்' பகுதியில் 'ஏரோசொல்' என்ற வேதிப்பொருளை தெளிப்பதன் மூலம், பூமியில் நுழையும் சூரிய ஒளியை கட்டுப்படுத்தி, புவிவெப்பத்தை குறைக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
அறிவியல் பல்வேறுசாதனைகள் புரிந்தாலும், மரக்கன்றுகள் நடவு செய்து, பூமியில் பசுமை பரப்பை அதிகரிப்பது ஒன்றுதான் சிறந்த வழி.
இவ்வாறு, பேசினார்.