தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பசுந்தேயிலைக்கு ரூ.17.61 விலை நிர்ணயம்

 பசுந்தேயிலைக்கு ரூ.17.61 விலை நிர்ணயம்

 பசுந்தேயிலைக்கு ரூ.17.61 விலை நிர்ணயம்


ADDED : டிச 01, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் நவ., மாதத்திற்கான, பசுந்தேயிலை கிலோவிற்கு, 17.61 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை மையம் மற்றும் இன்கோசர்வ் மையத்தில், ஏலம் விடப்படும்.

தேயிலை தூள், விலையின் அடிப்படையில், மாதந்தோறும், பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதன்படி, நீலகிரியில் சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த தேயிலை தூள், அந்தந்த மாதம் நடக்கும் ஏலங்களின் அடிப்படையில், அதே மாதத்திற்கான பசுந்தேயிலை விலையை குன்னூரில் உள்ள தேயிலை வாரியம், நிர்ணயம் செய்து வருகிறது.

இதன்படி, நவ., மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோ, 17.61 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இந்த விலையை, அனைத்து தொழிற்சாலைகளும் கடைபிடிக்க வேண்டும்; இதனை தென்னிந்திய தேயிலை வாரிய அனைத்து கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை மேம்பாட்டு உதவி இயக்குநர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர், என தேயிலை வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்., மாதத்தை விட நவ., மாதம் பசுந்தேயிலை கிலோவிற்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us