/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலைக்கு ரூ.18.98 விலை நிர்ணயம்
/
பசுந்தேயிலைக்கு ரூ.18.98 விலை நிர்ணயம்
ADDED : மார் 02, 2026 05:39 AM
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பிப்., மாதத்திற்கான, பசுந்தேயிலை விலை கிலோவிற்கு, ரூ.18.98 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை மையம் மற்றும் இன்கோசர்வ் மையத்தில், ஏலம் விடப்படும்,
தேயிலை தூள், விலையின் அடிப்படையில், மாதந்தோறும், பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
நீலகிரியில் சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த தேயிலை தூள், அந்தந்த மாதம் நடக்கும் ஏலங்களின் அடிப்படையில், அதே மாதத்திற்கான பசுந்தேயிலை விலையை குன்னூரில் உள்ள தேயிலை வாரியம், நிர்ணயம் செய்கிறது.
இதன்படி, தேயிலை 30 ஏ 5 (ஏ) பிரிவின், மார்க்கெட் கட்டுப்பாடு 2வது திருத்தம் அடிப்படையில், பிப்., மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோ, 18.98 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையை, அனைத்து தொழிற்சாலைகளும் கடைபிடிக்க வேண்டும்; இதனை தேயிலை வாரிய கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை மேம்பாட்டு உதவி இயக்குனர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர், என தேயிலை வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜன., மாதத்தை விட, பிப்., மாதம் பசுந்தேயிலை விலை கிலோவிற்கு, 60 பைசா அதிகரித்துள்ளது.

