/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் மழை குறைந்ததால் பசுந்தேயிலை மகசூல் குறைவு
/
கோத்தகிரியில் மழை குறைந்ததால் பசுந்தேயிலை மகசூல் குறைவு
கோத்தகிரியில் மழை குறைந்ததால் பசுந்தேயிலை மகசூல் குறைவு
கோத்தகிரியில் மழை குறைந்ததால் பசுந்தேயிலை மகசூல் குறைவு
ADDED : செப் 12, 2025 08:06 PM
கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்ததால், பசுந்தேயிலை மகசூல் படிப்படியாக குறைந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இத்தொழிலை, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் மற்றும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நம்பியுள்ளனர்.
தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 14 ரூபாய் முதல் அதிகபட்சம், 18 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இடு பொருட்களின் விலை உயர்வு, தோட்ட பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளதால், தற்போது கிடைத்துவரும் விலை போதுமானதாக இல்லை. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோத்தகிரியில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. தற்போது மழை குறைந்ததால், அரும்புகள் துளிர்விடாமல், தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை மகசூல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு போதுமான வருவாய் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.