நகரில் அதிகரிக்கும் குரங்குகள் உள்ளூர் வியாபாரிகள் பாதிப்பு
நகரில் அதிகரிக்கும் குரங்குகள் உள்ளூர் வியாபாரிகள் பாதிப்பு
ADDED : செப் 11, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் நகரில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுாரில், வனத்தை ஒட்டிய கிராமங்களில் குரங்குகள் முகாமிட்டு வீடு, கடைகளில் உள்ள பொருட்களை எடுத்து செல்வதுடன், மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இவைகள், நகரில் உள்ள, கடைகளில் வியாபாரிகள், ஊழியர்கள் அசந்த நேரத்தில் விற்பனைக்கு வைத்துள்ள பொருள்களை எடுத்து செல்வதுடன், பொருள்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
வியாபாரிகள் கூறுகையில், ‘நகரில் உலா வரும் குரங்குகள், கடைகளில், விற்பனைக்கு வைத்திருக்கும் முட்டை உட்பட பல பொருட்களை எடுத்து செல்கின்றன. இதனால், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே, நகரில் உலாவரும் குரங்குகளை, கூண்டு வைக்க பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
