/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலி செயல்பாடு; கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ADDED : செப் 24, 2024 11:37 PM
கூடலுார்: கூடலுார் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, காவலன் 'எஸ்.ஓ.எஸ்' செயலி செயல்பாடுகள், பதிவிறக்கம் முறைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காவல்துறை சார்பில், 'காவலன் எஸ்.ஓ.எஸ்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதில், பொது மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக பெண்கள், முதியோருக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை தடுத்து, பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் செயல்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், கூடலுார் போலீசார் சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கூடலுார் எஸ்.ஐ., குகனேஸ்வரன் தலைமை வைத்து, காவலன் 'எஸ்.ஓ.எஸ்' செயலியின் செயல்பாடுகள், பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, தலைமை காவலர்கள் புஷ்பாலீலா, கலையழகி, விஸ்வநாதன் ஆகியோர், காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலியை மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்வது குறித்து, மாணவர்களிடம் செயல் விளக்கம் அளித்து, பயிற்சி அளித்தனர்.