தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வித்யாரம்பத்தில் அகரம் எழுதிய குட்டீஸ்கள்

வித்யாரம்பத்தில் அகரம் எழுதிய குட்டீஸ்கள்

வித்யாரம்பத்தில் அகரம் எழுதிய குட்டீஸ்கள்


UPDATED : அக் 21, 2026 05:41 PM

ADDED : அக் 21, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 05:41 PM ADDED : அக் 21, 2026 05:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு பள்ளி வளாகத்தில், கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பள்ளி தாளாளர் மனோஜ் குமார் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் பிரபு, குமரவேல் ஆகியோர் மந்திரங்கள் கூறி, சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்தனர். பின்னர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சத்தியபாமா குழந்தைகளின் நாவில் தேன் மற்றும் தங்கம் மூலம் 'அ' கரம் எழுதியதுடன் பச்சரிசியில் குழந்தைகளின் விரலை கொண்டு எழுத கற்றுக் கொடுத்தார். புதிய மாணவர் சேர்க்கையும் துவக்கப்பட்டது. குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஆரம்ப கல்வி பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

* பந்தலுார் முத்துார் பிள்ளை மாரியம்மன் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோவில் அர்ச்சகர் ராமகிருஷ்ணன் தலைமையில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. அதில், குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கி, 'அ'கரம் எழுதி எழுத்தறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களுக்கு ஆயுத பூஜை செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us