ADDED : ஆக 26, 2026 06:23 PM
ஊட்டி: -
மாநில ஹஜ் ஆய்வாளர்களை சவுதி அரேபியா அனுப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஹஜ் புனித பயணம் (2027) மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப நிகர்நிலை வாயிலாக விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தற்காலிக பணி காலம், 2027. ஏப்., 3ம் தேதி முதல் ஜூன், 25ம் தேதிவரை சுமார், 2 மாதம் காலமாகும். மத்திய மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவ பணிகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய, மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும். பணிக்காக நிகழ்நிலை வாயிலாக (ஆன்லைன்) விண்ணப்பிக்கும் முறை, தகுதி ஆகியவை மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில், (www.hajcommitte gov.in) செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று (27ம் தேதி). இவ்வாறு, அந்த செய்தி குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
