UPDATED : நவ 23, 2026 06:58 PM
ADDED : நவ 23, 2026 06:58 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி சப்பந்தோடு என்ற இடத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கி உள்ள மனு:
சப்பந்தோடு பகுதியில் உள்ள பசுமை நகரில், 20 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த, 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு, சாலை மற்றும் பாலம் வசதி அமைத்து தர கோரி மனுக்கள் கொடுத்த நிலையில், 50 மீட்டர் தூரம் மட்டும் கான்கிரீட் சாலை அமைத்து பணியை நிறைவு செய்துவிட்டனர். இதனால், கிராமத்திற்கு செல்ல சாலை மற்றும் ஆற்றை கடக்க பாலம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கிராம மக்கள் பயன்பெறும் வகையில், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
