/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கைவரிசை; சேலம் வாலிபர் கைது
/
ஊட்டியில் கைவரிசை; சேலம் வாலிபர் கைது
ADDED : நவ 21, 2024 09:08 PM

ஊட்டி ; ஊட்டியில் கைவரிசை காட்டிய சேலம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி மிஷினரிஹில் பகுதியை சேர்ந்தவர் சாந்தா,60. கடந்த, 10ம் தேதி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள சர்ச்சுக்கு சென்று வீடு திரும்பி உள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் அவரது தங்க சங்கிலியை பறித்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சந்தா, பி-1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில், போலீசார் திருடனை தேடி வந்தனர்.
இந்நிலையில், 'நேற்று சேலம் பகுதியை சேர்ந்த தர்மன்,23, என்பவர், சேலத்தில் இருந்து ஊட்டிக்கு வந்து, பல்வேறு இடங்களில் திருட முயற்சி செய்துள்ளார்,' என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்து.
இதை தொடர்ந்து, தர்மனை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, பெண்ணிடமிருந்து நான்கு பவுன் தங்க சங்கிலியை பறித்ததை தர்மன் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்த தங்க சங்கலியை போலீசார் மீட்டனர். கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறுகையில்,' சமவெளி பகுதிகளை போன்று ஊட்டியிலும், சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட நபர் கொடுத்த தகவலின் படி, வேறு யாராவது வழிபறி திருடர்கள் ஊட்டியில் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பெண்கள் இரவு நேரங்களில் தனியாக நடப்பதை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் யாராவது இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.