/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில் பயன்பாட்டுக்கு மேடை கமிட்டி நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு
/
கோவில் பயன்பாட்டுக்கு மேடை கமிட்டி நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு
கோவில் பயன்பாட்டுக்கு மேடை கமிட்டி நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு
கோவில் பயன்பாட்டுக்கு மேடை கமிட்டி நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு
ADDED : மே 12, 2025 10:51 PM

பந்தலுார்,; பந்தலுார் அருகே நெல்லியாளம் டான்டீ மாரியம்மன் கோவில் பயன்பாட்டுக்காக, 8 லட்சம் ரூபாயில் மேடை அமைத்து, கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பந்தலுார் அருகே நெல்லியாளம் டான்டீ பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு மேடை இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கூடலுார் எம்.எல்.ஏ. ஜெயசீலன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 8- லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து மேடை அமைக்கும் பணியை நிறைவு செய்தார். நேற்று கோவில் கமிட்டியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் கமிட்டி நிர்வாகிகள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து கோவில் அர்ச்சகர் மணிகண்டன் சிறப்பு பூஜைகள் செய்தார். எம்.எல்.ஏ., வுக்கு பசுந்தேயிலை மாலை அணிவித்து பரிவட்டம் கட்டப்பட்டது. கோவில் கமிட்டி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் பழனிச்சாமி பெயரில் கோவிலில் சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.