/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'குழந்தைகள் நன்றாக படிக்க மன மகிழ்ச்சி அவசியம்': பெற்றோருக்கு முன்னாள் டி.ஜி.பி., அறிவுரை
/
'குழந்தைகள் நன்றாக படிக்க மன மகிழ்ச்சி அவசியம்': பெற்றோருக்கு முன்னாள் டி.ஜி.பி., அறிவுரை
'குழந்தைகள் நன்றாக படிக்க மன மகிழ்ச்சி அவசியம்': பெற்றோருக்கு முன்னாள் டி.ஜி.பி., அறிவுரை
'குழந்தைகள் நன்றாக படிக்க மன மகிழ்ச்சி அவசியம்': பெற்றோருக்கு முன்னாள் டி.ஜி.பி., அறிவுரை
ADDED : மார் 05, 2024 12:38 AM

ஊட்டி;''குழந்தைகள் நன்றாக படிக்க அவர்களுக்கான மன மகிழ்ச்சியை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்,'' என, முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார்.
ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், கிரசன்ட் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது:
பெற்றோர் முதலில் குழந்தைகளை தனி மனிதனாக மதிக்க வேண்டும். குழந்தைகளை அடிக்கடி திட்டினால் அவர்கள் தன்னம்பிக்கை; தைரியத்தை இழந்து விடுவர். குழந்தைகளுக்கு உணவு மட்டும் போதாது; மன மகிழ்ச்சி அவசியம்.
அவர்களின் ஒவ்வொரு செயல்கள் குறித்தும் அடிக்கடி பாராட்ட வேண்டும். வாழ்க்கையில் முன்னேற குழந்தைகளுக்கு பெரிய நோக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். பெற்றோர் 'ரோல் மாடலாக' இருக்க வேண்டும். அவர்களுக்காக நாம் மகிழ்ச்சியாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
தற்போதைய கால கட்டத்தில் வாசிப்பு பழக்கம் குறைந்து வருவது வருத்தமாக உள்ளது. ஒவ்வொரு மாணவரிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க, பெற்றோர், ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
பெற்றோர் தங்கள் வீடுகளில், நல்ல தினசரி நாளிதழ்களை வாங்கி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதில் உள்ள அறிவியல் பூர்வமான தகவல்களை படிக்க செய்து மேம்படுத்த வேண்டும். விளையாட்டு போட்டிகளில் ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, மலை மாவட்ட சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் உமர்பரூக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

