/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துளிர் விட்ட தேயிலை செடிகள்: மகசூல் கிடைப்பதால் மகிழ்ச்சி
/
துளிர் விட்ட தேயிலை செடிகள்: மகசூல் கிடைப்பதால் மகிழ்ச்சி
துளிர் விட்ட தேயிலை செடிகள்: மகசூல் கிடைப்பதால் மகிழ்ச்சி
துளிர் விட்ட தேயிலை செடிகள்: மகசூல் கிடைப்பதால் மகிழ்ச்சி
ADDED : பிப் 20, 2024 11:07 PM

ஊட்டி:உறைபனி தாக்கம் குறைந்து வருவதால், தேயிலை செடிகள் துளிர் விட்டு மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவ., மாதம் துவங்கும் பனிபொழிவு பிப்., மாதம் வரை நீடிக்கும். உறைபனி தாக்கத்தால் தேயிலை செடிகள் கருகி பசுந்தேயிலை வரத்து குறைகிறது. கடந்தாண்டில் உறைப்பனி தாக்கம் தாமதமாக துவங்கியது.
இரண்டு முறை உறைபனி தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. உறைப்பனி தாக்கம் அதிகளவில் தென்பட்டால் தேயிலை செடிகள் கருகி பசுந்தேயிலை மகசூல் அடியோடு குறைந்தது. தற்போது, தேயிலை செடிகள் பாதிக்கும் அளவுக்கு உறைப்பனி தென்படவில்லை.
இதனால், ஊட்டி அருகே இத்தலார், பெம்பட்டி, பேலிதளா, போர்த்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை செடிகள் துளிர்விட்டு அதிகளவில் மகசூல் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.