/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சி
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சி
நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சி
நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சி
ADDED : ஆக 12, 2025 07:42 PM
மஞ்சூர்; எடக்காடுக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மஞ்சூர் அருகே உள்ள எடக்காடில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எடக்காடை மையப்பகுதியாக கொண்டு, ஊட்டியிலிருந்து எமரால்டு வழித்தடத்தில், தங்காடு, கன்னேரி மந்தனை வழியாக எடக்காடுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.
திடீரென இரண்டு அரசு பஸ்கள் எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க கோரி மக்கள் போக்குவரத்து துறையினரை வலியுறுத்தி வந்தனர். போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்காததால், மக்களை ஒன்று திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம், ஊட்டி அரசு போக்குவரத்து கழக மாவட்ட மேலாளர் பிரகாஷ் மற்றும் கிளை மேலாளர்கள் எடக்காடு பகுதிக்கு வந்து, வழித்தடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பிக்கட்டி பேரூராட்சி கவுன்சிலர் தர்மராஜ். எட்டு ஊர் தலைவர்கள் மகாலிங்கா , ஜெயக்குமார், பீமன் உள்ளிட்டோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்குவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கிராம மக்களிடம் உறுதியளித்தனர். தொடர்ந்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் அதே வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.