/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக்' பையால் பாதிப்பு; காகித பை பயன்படுத்த அறிவுரை
/
'பிளாஸ்டிக்' பையால் பாதிப்பு; காகித பை பயன்படுத்த அறிவுரை
'பிளாஸ்டிக்' பையால் பாதிப்பு; காகித பை பயன்படுத்த அறிவுரை
'பிளாஸ்டிக்' பையால் பாதிப்பு; காகித பை பயன்படுத்த அறிவுரை
ADDED : ஜூலை 13, 2025 08:31 PM

ஊட்டி; ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில், காகித பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு போட்டி நடந்தது.
நீலகிரியில் 'பிளாஸ்டிக்' பை தடை அமல்படுத்தப்பட்ட, 25 ஆண்டுகள் ஆன நிலையில், காகித பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும், சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஊட்டியில் உள்ள கிரசன்ட் மழலையர் பள்ளியில் நிகழ்ச்சி நடந்தது.
அதில், சிறுவர், சிறுமியர் காகிதத்தால் ஆன, பல்வேறு பைகளை வடிவமைத்து காட்சி படுத்தி இருந்தனர்.
பெற்றோர் மத்தியிலும் வீடுகளில் காதிகப்பை படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போட்டியில் வெற்று பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.