/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதிகள் வேண்டும்; மாவட்ட கலெக்டரிடம் மனு
/
அடிப்படை வசதிகள் வேண்டும்; மாவட்ட கலெக்டரிடம் மனு
ADDED : நவ 12, 2024 09:56 PM
ஊட்டி ; நகராட்சி வார்டுகளில் உள்ள அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது: ஊட்டி நகராட்சியில் அ.தி.மு.க., வை சேர்ந்த, 7 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களுக்கு உட்பட்ட வார்டில் பாதாள சாக்கடை, கழிவு நீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் செய்து தராமல் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. ஒவ்வொரு மன்ற கூட்டத்திலும் வார்டு பிரச்னை குறித்து வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டி வருகிறது. எனவே, வார்டுகளில் உள்ள, அடிப்படை பிரச்னைகளை விரைந்து முடிக்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.