தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ரூ.2.27 கோடி ஹவாலா பறிமுதல்; கேரள எல்லையில் இருவர் கைது

ரூ.2.27 கோடி ஹவாலா பறிமுதல்; கேரள எல்லையில் இருவர் கைது

ரூ.2.27 கோடி ஹவாலா பறிமுதல்; கேரள எல்லையில் இருவர் கைது


ADDED : மே 06, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 05:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலூர்: நீலகிரி மாவட்ட எல்லை ஒட்டிய கேரளா வயநாடு சோதனை சாவடியில், 2.27 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடகா மாநிலத்திலிருந்து காரில் கேரளா மாநிலத்திற்கு ஹவாலா பணம் கடத்திச் செல்வதாக கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் நாயர், எஸ்.ஐ., ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார், தமிழக எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் தகரப்பாடி சோதனை சாவடியில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு வந்த (கே.ஏ.51. எம்.யு.5173) என்ற பதிவெண் கொண்ட காரை சோதனையிட்டனர். அதன் பின்பக்கம் ரகசிய அறை அமைத்து அதனுள், பணம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

கடத்தி வரப்பட்ட 2 கோடியே 27 லட்சத்து, 43 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், பணக்கடத்தில் ஈடுபடுத்திய காரை பறிமுதல் செய்தனர். பணத்தை கடத்தி வந்த சுல்தான் புத்தேரி முல்லங்குன்னு பகுதியைச் சேர்ந்த அர்ஷாத்-44, கோழிக்கோடு கொடுவல்லி, மதரஸா நகர் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் 40 ஆகியோரை கைது செய்தனர். சுல்தான் பத்தேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us