/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; அரசு பஸ் டிரைவர் பலி
/
வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; அரசு பஸ் டிரைவர் பலி
வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; அரசு பஸ் டிரைவர் பலி
வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; அரசு பஸ் டிரைவர் பலி
ADDED : ஆக 17, 2025 09:36 PM

கோத்தகிரி; கோத்தகிரியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில், அரசு பஸ் டிரைவர் பலியானார்.
கோத்தகிரி கொட்டக்கம்பை பகுதியை சேர்ந்த மனோகரன்,48. இவர், அரசு போக்குவரத்து கழக கோத்தகிரி கிளையில் கடந்த, 12 ஆண்டுகளாக டிரைவராக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, பணியை முடித்துவிட்ட மனோகரன், வீட்டிற்கு செல்வதற்காக, தனது ஸ்கூட்டியில் சென்றார். அப்போது, டானிங்டன் பகுதியில் இருந்து, கோத்தகிரி தெற்கு பகுதியை சேர்ந்த முபாரக், 22, வேகமாக ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.
இதில், இருவரும் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், இருவரையும் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து, முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட மனோகரன், பாதி வழியிலேயே உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் பலியான மனோகரனுக்கு, ஜெயந்தி என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளன. கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.