/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையின் நடுவில் கட்டடம் அமைக்க சுகாதார துறை திட்டம்
/
சாலையின் நடுவில் கட்டடம் அமைக்க சுகாதார துறை திட்டம்
சாலையின் நடுவில் கட்டடம் அமைக்க சுகாதார துறை திட்டம்
சாலையின் நடுவில் கட்டடம் அமைக்க சுகாதார துறை திட்டம்
ADDED : மார் 19, 2025 08:06 PM

பந்தலுார்; பந்தலுார் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கி இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, தற்போது புதிய கட்டடங்கள் கட்டுப்பணி நீண்ட இழுபறிக்கு பின்னர் துவக்கப்பட்டு உள்ளது. அதில், நீதிமன்றம் செல்லும் சாலையின் நடுவில் கட்டடம் அமைப்பதற்கான பணிகளை ஒப்பந்ததாரர் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதி தாழ்வாக உள்ளதால், நீதிமன்றம் மற்றும் அரசு துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், முருகன் கோவில் போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்படும்.
மக்கள் கூறுகையில், 'இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, சாலை பாதிக்கப்படாமல் கட்டடங்களை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.