நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி ; கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில், கடைகள் வர்த்தக நிறுவனங்கள், தனியார் கிளினிக்குகள், வங்கிகள், வி.ஏ.ஓ., அலுவலகம் உட்பட, குடியிருப்புகள் நிறைந்துள்ளன.
இதனால், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, 'இன்கோ' தேயிலை தொழிற்சாலை சந்திப்பு அருகே, குப்பை கொட்டப்படுகிறது. அடிக்கடி குப்பை அகற்றாததால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கால்நடைகள் மற்றும் நாய்கள் குப்பையை கிளறி உண்ணுவதால், அவைகளுக்கு உடல் உபாதை ஏற்படுகிறது.