/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆரோக்கிய மாதா பெருவிழா; திரளான பங்கு மக்கள் பங்கேற்பு
/
ஆரோக்கிய மாதா பெருவிழா; திரளான பங்கு மக்கள் பங்கேற்பு
ஆரோக்கிய மாதா பெருவிழா; திரளான பங்கு மக்கள் பங்கேற்பு
ஆரோக்கிய மாதா பெருவிழா; திரளான பங்கு மக்கள் பங்கேற்பு
ADDED : செப் 14, 2025 10:08 PM

கோத்தகிரி; கோத்தகிரி துாய ஆரோக்கிய மாதா பெருவிழாவில், திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர்.
கோத்தகிரி துாய ஆரோக்கிய மாதா பெருவிழா கடந்த, 5ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு, முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில், கொடியேற்றத்துடன் விழா துவங்கி, மாதாவின் கருணைகளின் முக்கியத்துவம் மற்றும் நற்கருணை பவனி நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய திருவிழா நாளான நேற்று, ஆரோக்கிய மாதா பெருவிழா நடந்தது. ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பெருவிழா நடந்தது. கோத்தகிரி பங்கு தந்தை அமிர்தராஜ் முன்னிலையில், காலை, 6:00 மணி முதல், 8:00 மணிவரை திருப்பலிகள் நடந்தன.
மாலை, 5:00 மணிக்கு அருட்தந்தை பிரின்ஸ் தனிமையில் சிறப்பு திருப்பலி, ஆடம்பர தேர் பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. விழா வில், நீலகிரி மாவட்டம் உட்பட, சமவெளி பகுதிகளில் இருந்து, திரளான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர். மாவட்ட எஸ்.பி., நிஷா உத்தரவுப்படி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.