/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏ.டி.சி., பஸ் நிறுத்தத்தில் சுகாதார சீர்கேடு
/
ஏ.டி.சி., பஸ் நிறுத்தத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 31, 2025 11:53 PM
ஊட்டி: ஊட்டி ஏ.டி.சி., பஸ் நிறுத்தத்தில் மாட்டு சாணத்தால், துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
முக்கிய சுற்றுலா நகரமான ஊட்டியில் ஏ.டி.சி., பகுதி, முக்கிய பஸ் நிறுத்தமாக உள்ளது. மாவட்டத்தில் உள்ளூர் கிராமப்புறங்கள் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு இயக்கப் படும் அரசு பஸ்களில் பயணிக்க, நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் காத்து கிடக்கின்றனர்.
தவிர, உள்ளூர் மக்களின் நடமாட்டமும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இப்பகுதியில் முகாமிட்டு, சாணம் போட்டு, சிறுநீர் கழித்து வருவதால், பயணிகள் துர்நாற்றத்தில் இருக்கைகளில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதால், நோய் தொற்று அபாயமும் அதிகரித்து வருகிறது.

