/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை; பகலை இருளாக்கிய மேகமூட்டம் பகலை இருளாக்கிய மேக மூட்டம்

ADDED : ஆக 28, 2025 10:32 PM

பந்தலுார் ;பந்தலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று காலை லேசான மழை பெய்த நிலையில், மதியம் முதல் இரவு வரை கனமழை பெய்தது. மாலை, 4:00 நிலவரப்படி, 13 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. மழையின் காரணமாக பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். தேவாலா வாழவயலில் சுந்தரலிங்கம் என்பவரின் வீடு இடிந்து விழுந்ததில் சந்திரிகா,45, என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ஊட்டி மருத்துவ கல்லுாரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இங்குள்ள பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடும் மேகமூட்டம் நிலவியதால், சுற்றுவட்டார பகுதிகள் பகல் நேரத்திலும் இருளான காலநிலை நிலவியது. வாகன ஓட்டுனர்கள் 'மிஸ்ட்' விளக்கு வெளிச்சத்தில் வாகனங்களை இயக்கினர். மேலும், கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, இவ்வழியாக கோழிக்கோடு செல்லும் வாகனங்கள், நிலச்சரிவின் காரணமாக தாமரைச்சேரி வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை, தாசில்தார் சிராஜு நிஷா, வருவாய் அலுவலர் வாசுதேவன், வி.ஏ.ஓ. மாரிமுத்து உள்ளிட்ட வருவாய்த்துறை என மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதேபோல, ஊட்டி, கூடலுார் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை பெய்ததால், சுற்றுலா பயணிகள் அவதிபட்டனர். மழை கோட்டுடன் உலா வந்தனர்.
வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில்,' இப்பகுதியில் இன்று(நேற்று) மாலை வரை, 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரியளவிலான சேதங்கள் ஏதும் இல்லை. நிவாரண முகாம் தயார் நிலையில் உள்ளது. கண்காணிப்பு பணி தொடர்கிறது,' என்றனர்.