sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நள்ளிரவில் கனமழை! மரங்கள் விழுந்து, பாறைகள் உருண்டு பாதிப்பு; களத்தில் தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர்

/

நள்ளிரவில் கனமழை! மரங்கள் விழுந்து, பாறைகள் உருண்டு பாதிப்பு; களத்தில் தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர்

நள்ளிரவில் கனமழை! மரங்கள் விழுந்து, பாறைகள் உருண்டு பாதிப்பு; களத்தில் தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர்

நள்ளிரவில் கனமழை! மரங்கள் விழுந்து, பாறைகள் உருண்டு பாதிப்பு; களத்தில் தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர்


ADDED : அக் 15, 2024 09:56 PM

Google News

ADDED : அக் 15, 2024 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுாரில் இரவில் பெய்த கன மழையால் சாலையில் மரங்கள் விழுந்ததுடன் பாறைகள் உருண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிய சூழலில், தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னுாரில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது.

வெட்டி அகற்றம்


அதில், வண்டிச்சோலை -கோடமலை சாலையில், நள்ளிரவு, 1:45 மணிக்கு ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. கேத்தி சாலையில் அதிகாலை, 3:20 மணிக்கு மரங்கள் விழுந்தன. தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். எனினும் கோடமலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க சாலையோரத்தில் இருந்த, வெட்டப்பட்ட மரத் துண்டுகளை நேற்று காலை அகற்றினர்.

இதே போல,அளக்கரை சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டன. மாநில நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவிடன் பாறைகளை அகற்றினர். சீரமைப்பு பணிகளின் போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரங்கள் மின் கம்பங்கள் மீது விழுந்ததால் சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டன. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு உடனடியாக மின் சப்ளை வழங்கினர்.

மண்சரிவு


மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் துவங்கி ஆக., மாதம் வரை பரவலாக மழை பெய்தது. செப்., மாதம் அவ்வப்போது லேசான மழை பெய்த நிலையில், பகல் நேரங்களில் வெயில் நிலவியது. தற்போது மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது.

இரவு நேரங்களில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் சாரல் மழையும் அதை தொடர்ந்து மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் மஞ்சூர் - கெத்தை சாலையில் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது.

கிண்ணக்கொரை, அப்பர்பவானி, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட சாலைகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன் மண் சரிவுகளை உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

மணல் மூட்டைகள் தயார்


வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஞ்சூர், குந்தா கேம்ப் பகுதியில், 10 ஆயிரம் மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரம், பவர்ஷா உள்ளிட்ட உபகரணங்களை நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''நீலகிரியில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ள அரசு துறைகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் பேரிடர் ஏற்படும் இடங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள பொது மக்களை இரவு நேரங்களில் முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு, 1077 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us