/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொட்டி தீர்த்த கனமழை; தடுப்பு சுவர்கள் 'டமார்'
/
கொட்டி தீர்த்த கனமழை; தடுப்பு சுவர்கள் 'டமார்'
ADDED : அக் 01, 2024 10:51 PM

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையில், நான்கு இடங்களில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
கோத்தகிரி பகுதியில் சில நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது.மழையில், ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சிஊராட்சிக்கு உட்பட்ட, ஒன்னதலை பகுதியில் அமைந்துள்ள, ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில், 10 அடி உயரம் கொண்ட தடுப்புச்சுவர் இடிந்து விடிந்தது.
ஆட்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொழிற்சாலை ஊழியர்கள் சாலையில் விழுந்த கல் மற்றும் மண் குவியலை ஒதுக்கினர். இதே போல, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், தேனாடு, ஜக்கனாரை மற்றும் நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தலா ஒரு தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தன. நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் இடிபாடுகளை அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி பகுதியில் கூடுமானவரை சாலையோரங்களில் உள்ள அபாயம் மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், மரங்கள் விழுந்து அசம்பாவிதம் ஏற்படவில்லை. வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை உதவியுடன், பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, சீரமைப்பு பணி நடந்தது.