/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை; மண்சரிவால் மலை ரயில் இன்றும் ரத்து

ADDED : அக் 01, 2024 06:20 AM

குன்னுார்: குன்னுார் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கன மழையால், மலைரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு, மேட்டுப்பாளையம்- குன்னுார் இடையே மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி குன்னுாரில், 6.2 செ.மீ., மழையளவு பதிவானது.
இந்நிலையில், குன்னுார் மலை ரயில் பாதையில், ரன்னிமேடு, ஆடர்லி, ஹில்குரோவ் உள்ளிட்ட இடங்களில் கற்களுடன் மண்சரிவு தண்டவாளத்தில் விழுந்தன. மண்; கற்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு ஊட்டி நோக்கி புறப்பட்ட மலை ரயில் ரத்து செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் தொகை திருப்பி வழங்கப்பட்டது.
இரவு வரை பணிகள் நிறைவு பெறாததால், இன்றும் (அக்.,1) மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து செயயப்படுகிறது. அதே வேளையில், ஊட்டி- குன்னுார் இடையே இயக்கப்படும் மற்ற ரயில்கள் பாதிப்பின்றி இயக்கப்படுகிறது.