/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடி மின்னலுடன் கனமழை -மின்சாரம் துண்டிப்பால் சிரமம்
/
இடி மின்னலுடன் கனமழை -மின்சாரம் துண்டிப்பால் சிரமம்
இடி மின்னலுடன் கனமழை -மின்சாரம் துண்டிப்பால் சிரமம்
இடி மின்னலுடன் கனமழை -மின்சாரம் துண்டிப்பால் சிரமம்
ADDED : மார் 26, 2025 08:57 PM
பந்தலுார்; பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கூடலுார் மற்றும் பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது, மழை தலைக்காட்டி வருகிறது.
இங்கு சமவெளி பகுதிகளை போல் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் தொடர் மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான காலநிலை மாறி வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை இடி மின்னலுடன் பலத்த காற்று வீசி மழை பெய்தது.
ஒரு மணி நேரம், மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் இடி இடித்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான இடங்களில் பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட 'எலக்ட்ரானிக்' பொருட்கள் பழுதடைந்தன. மழையால் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்ட போதும், தேயிலை மற்றும் காபி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவ துவங்கியுள்ளது.