/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை; விவசாய நிலங்களில் தேங்கிய மழை வெள்ளம்

ADDED : செப் 11, 2025 11:29 PM

ஊட்டி ; ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், முத்தோரை பாலாடா பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவுகிறது. கடந்த வாரம் மழையின் அளவு சற்று குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று மதியம், ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில், 2 மணிநேரம் கனமழை பெய்தது. குறிப்பாக, முத்தோரை பாலாடா, நஞ்சநாடு, இத்தலார், கப்பத்தொரை போன்ற கிராம பகுதிகளில் பெய்த கனமழையின் போது, விவசாய நிலங்களில் வெள்ளம் தேங்கியது. அதில், அறுவடைக்கு தயாராக இருந்த மலை காய்கறி பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு காய்கறிகள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் அளவு குறித்து தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.