/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் கொட்டி தீர்த்த கனமழை; அரசு பஸ் மீது விழுந்த பாறை கற்கள்
/
மலையில் கொட்டி தீர்த்த கனமழை; அரசு பஸ் மீது விழுந்த பாறை கற்கள்
மலையில் கொட்டி தீர்த்த கனமழை; அரசு பஸ் மீது விழுந்த பாறை கற்கள்
மலையில் கொட்டி தீர்த்த கனமழை; அரசு பஸ் மீது விழுந்த பாறை கற்கள்
ADDED : அக் 16, 2025 06:51 AM

குன்னுார்: குன்னுாரில் மலைப்பாதையில் சென்ற கேரள அரசு பஸ்சின் மீது பாறைகள் விழுந்தன.
நீலகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. அதிகபட்சமாக கோடநாட்டில், 86 மி.மீ., கோத்தகிரியில், 62 மி.மீ, எடப்பள்ளியில், 59 மி.மீ., குன்னுாரில், 47 மி.மீ., மழையளவு பதிவானது.
குன்னுார் மலைப்பாதையில் நள்ளிரவு, 12:30 மணியளவில், சின்ன குரும்பாடி அருகே பாறை கற்கள் விழுந்தன. அப்போது, கோவையில் இருந்து, 48 பயணியருடன் மானந்தவாடி சென்று கொண்டிருந்த, கேரள மாநில அரசு பஸ் முன்புறம், பக்கவாட்டில் பாறைகள் விழுந்தன. அதில், பஸ் சேதமானது. அதிர்ஷ்டவசமாக பயணியர் உயிர் தப்பினர்.
தகவலில், தேசிய நெடுஞ்சாலை துறையினர், வனத்துறையினர் பொக்லைன் உதவியுடன் பாறை கற்களை அகற்றினர். தொடர்ந்து அங்கு வந்த அரசு பஸ்சில், பயணியரை அனுப்பி வைத்தனர்.
இதேபோல, குன்னுார் மலை ரயில் நிலையத்தில், 6.7 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.