/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் கடும் பனிப்பொழிவு; 4.22 லட்சம் கிலோ தேயிலை உற்பத்தி சரிவு

ADDED : டிச 24, 2025 06:14 AM

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், ஒரே மாதத்தில், 4.22 லட்சம் கிலோ தேயிலை வரத்து சரிந்தது.
நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் அதிகரித்து, பசுந்தேயிலை மகசூல் பாதித்து வருவதால், தொழிற்சாலைகளில் தேயிலை துாள் உற்பத்தியும் குறைந்து வருகிறது.
மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை குன்னுார் தேயிலை மையத்தில் ஏலம் விடும் நிலையில், கடந்த, 2 நாட்களுக்கு முன்பு நடந்த, 51வது ஏலத்தில்,'16.19 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்ததில், 12.42 லட்சம் கிலோ விற்னை ஆனது. 23.26 சதவீதம் துாள் தேக்கமடைந்தது. சராசரி விலை கிலோவிற்கு, 114.17 ரூபாய் என இருந்தது. மொத்த வருமானம், 14.18 கோடி ரூபாய் கிடைத்தது.
கடந்த நவ., மாதம் இறுதியில் நடந்த, 47வதுஏலத்தை ஒப்பிடுகையில், 4.22 லட்சம் கிலோ வரத்து, 3 லட்சம் கிலோ விற்பனையும் சரிந்தது; 7.31 கோடி ரூபாய் மொத்த வருவாய் வீழ்ச்சி கண்டது.
கடந்த ஆண்டு டிச., மாதம் நடந்த, 51வது ஏலத்தில் சராசரி விலை கிலோவிற்கு, 128.41 ரூபாய் என இருந்த நிலையில், நடப்பாண்டின், 51வது ஏலத்தில்,14.24 ரூபாய் சரிந்து, 114.17 ரூபாய் என விலை கிடைத்துள்ளது.