/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் நின்ற கனரக வாகனம் மஞ்சூரில் போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் நின்ற கனரக வாகனம் மஞ்சூரில் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் நின்ற கனரக வாகனம் மஞ்சூரில் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் நின்ற கனரக வாகனம் மஞ்சூரில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 06, 2024 05:38 AM
ஊட்டி, : மஞ்சூரில் சாலை நடுவே நின்ற கனரக வாகனத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மஞ்சூர் அருகே தொழிற்சாலையில் நடந்து வரும் பணிக்காக பிற இடத்திலிருந்து தொழிற்சாலைக்கு தேவையான பொருட்கள், கனரக வாகனத்தில் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை அங்கு வந்த கனரக வாகனம் திரும்பி செல்லும் போது, மஞ்சூர் பஜாரில் முதல் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து திரும்ப முடியாமல் சாலை நடுவே நின்றது.
பிரதான சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் கனரக வாகனம் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரானது.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'இது போன்ற பெரிய வாகனங்கள் வரும் போது, முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.