/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஹெலிகாப்டர் விபத்து நினைவு தினம் அனுஷ்டிப்பு
/
ஹெலிகாப்டர் விபத்து நினைவு தினம் அனுஷ்டிப்பு
ADDED : டிச 08, 2024 07:45 AM

குன்னூர்: குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு, கடந்த 2021ம் ஆண்டு டிச., 8ம் தேதி, முப்படை தளபதி பிபின் ராவத், கோவை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் குன்னுார் வந்த போது, காட்டேரி அருகே நஞ்சப்பாசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
உலகையே உலுக்கிய இந்த விபத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு நிகழ்வு நேற்று, நஞ்சப்பாசத்திரத்தில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் உள்ள நினைவு தூணில் நடந்தது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, உயிரிழந்த, 14பேரின் படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில், ராணுவ இசையுடன் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.