/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு 'ஹெல்மெட்' கட்டாயம்: சாலை பாதுகாப்பு வார விழாவில் விழிப்புணர்வு

ADDED : ஜன 14, 2025 01:32 AM
ஊட்டி:
நம் நாட்டில் அதிக விபத்துக்கள் பதிவாகும் மாநிலங்களில், தமிழகம் முன்னிலையில் உள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜன.,11ம் தேதி முதல் 17ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது.
சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் மற்றும் விபத்துக்களை குறைக்க எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நீலகிரி போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு ஊட்டியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. பிங்கர் போஸ்ட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி., நிஷா பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார்.
பின் , ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி பேரணியில் பங்கேற்றார். பேரணியில் கோவையிலிருந்து தனியார் கிளப்புகளை சேர்ந்த, 40 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், 80 போலீசார் பங்கேற்றனர்.
பிங்கர் போஸ்ட் துவங்கிய பேரணி ரோகிணி சந்திப்பு, ஹில் பங்க், கலெக்டர் அலுவலகம், சேரிங்கிராஸ், ஆவின் வழியாக லவ்டேல் சந்திப்பு வரை, 7 கி.மீ., துாரத்துக்கு பேரணி நடந்தது.
முன்னதாக, ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி., நிஷா ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டவுன் டி.எஸ்.பி., நவீன் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.