/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் உதவி
/
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் உதவி
ADDED : பிப் 26, 2026 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரியில் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 78வது பிறந்தநாளை ஒட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
கோத்தகிரி நகர செயலாளர் நஞ்சு சுப்ரமணி தலைமை வகித்தார். அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், நகர்மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வடிவேல் மற்றும் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் விசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அன்னதானம் மற்றும் பரிசு பொருட்களை, முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு வழங்கினார். ஜெ.,பேரவை ஒன்றிய செயலாளர் காரி நன்றி கூறினார்.

