தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தில் உதவியாளர்களும் பங்கேற்பு

வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தில் உதவியாளர்களும் பங்கேற்பு

வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தில் உதவியாளர்களும் பங்கேற்பு


ADDED : பிப் 10, 2024 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2024 01:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்;கூடலுார் ஓவேலி பகுதியில், செக் ஷன்-17 அரசு நிலத்தில், புதிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரியசோலை பகுதியில், செரீப் என்பவர் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியை மேற்கொண்டார்.

வருவாய் துறை ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து பணியை நிறுத்தும்படி கூறியதுடன், இது தொடர்பாக தாசில்தாரிடம் அறிக்கையும் வழங்கினர்.

இந்நிலையில் 'பணியை தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பித்தும் அதனை செயல்படுத்தவில்லை' என, கூறி, கூடலுார் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கினார்.

'அந்த நோட்டீசை நிபந்தனை இன்றி ரத்து செய்யவும்; தாசில்தாரை மாற்ற வேண்டும்,' என, கூடலுார், பந்தலுார் கிராம நிர்வாக அலுவலர்கள், 7ம் தேதி கூடலுார் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், மூன்றாவது நாளான, நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவாக கிராம நிர்வாக உதவியாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதன் காரணமாக, பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us