தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பள்ளி மாணவிகள் பயன் பெற உதவி

பள்ளி மாணவிகள் பயன் பெற உதவி

பள்ளி மாணவிகள் பயன் பெற உதவி


ADDED : பிப் 07, 2024 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார் : பந்தலுார் குந்தலாடி மற்றும் கரியசோலை, நெலாக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளிகளில், 'ஆல் தி சில்ரன், ஒயிட் ஆரோ டிரஸ்ட்' சார்பில் பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில், 'நாப்கின் எரியூட்டும்' இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலமை வகித்து பேசுகையில், ''நாப்கின்களை திறந்த வெளியில் போடுவதாலும், கழிப்பிடங்களில் போடுவதாலும், அவற்றை அகற்றுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், அதனை எரியூட்டம் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை மாணவிகள் முறையாக பயன்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.

கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''சுகாதாரத்தை பேணுவதில் பெண்கள் அக்கறை கொள்ள வேண்டும்,'' என்றார்.

ஆசிரியர்கள் அன்ன பாக்கியம், மணிவாசகம், மார்கிரட் மேரி, மேகலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us