/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைகளை காலி செய்ய ஐகோர்ட் உத்தரவு; குன்னுார் வியாபாரிகள் கலக்கம்
/
கடைகளை காலி செய்ய ஐகோர்ட் உத்தரவு; குன்னுார் வியாபாரிகள் கலக்கம்
கடைகளை காலி செய்ய ஐகோர்ட் உத்தரவு; குன்னுார் வியாபாரிகள் கலக்கம்
கடைகளை காலி செய்ய ஐகோர்ட் உத்தரவு; குன்னுார் வியாபாரிகள் கலக்கம்
ADDED : ஆக 28, 2025 12:26 AM
குன்னுார்:
குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து புதிதாக கட்டுமானம் கட்டும் விவகாரத்தில், 'இரு வாரத்திற்குள் கடைகளை காலி செய்ய வேண்டும்,' என, ஐகோர்ட் உத்தவிட்டுள்ளது.
குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகளை இடித்து, புதிதாக கடைகளை கட்ட, 41.50 கோடி ரூபாய் மதிப்பில் அரசு திட்டமிட்டது. உழவர் சந்தை அருகே, வியாபாரிகளுக்கு மாற்று கடைகள் அமைத்தது. அந்த கடைகளுக்கு செல்ல வியாபாரிகள் மறுத்து வந்தனர்.
இந்நிைலையில், 15 நாட்களில், கடைகளை காலி செய்ய முதற்கட்டமாக, 324 கடைகளுக்கு நகராட்சி நோட்டீஸ் வழங் கியது. அதில், 46 பேர் கடைகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு, ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதனை தொடர்ந்து வியாபாரிகளின் கருத்து கேட்கப்பட்டது. அதன்பின், குன்னுாரில் ஒதுக்கப்பட்ட தற்காலிக கடைகளை ஆய்வு செய்து, அறிக்கையை ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. அதில், 'தற்காலிக கடைகளில் அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையடையவில்லை; அதனை உடனடியாக முடிக்க அறிவுறுத்த வேண்டும்,' என, கூறப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து, தற்காலிக கடைகளில் வியாபாரிகள் கோரிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டு, நகராட்சி சார்பில் உரிய புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன. இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணையில், நகராட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, மற்றும் அரசு சிறப்பு வக்கீல் சீனிவாசன் விவாதத்தை ஏற்று, 'நகராட்சி கடைகளை, உத்தரவு கிடைக்க பெற்றதில் இருந்து, இரு வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும்; நகராட்சி புதிய கட்டுமான பணிகளை துவக்க வேண்டும்,' என, ஐகோர்ட் உத்தரவிட்டதாக, நகராட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.