/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை கொள்முதல் நிலையங்களில் வரத்து அதிகம்
/
தேயிலை கொள்முதல் நிலையங்களில் வரத்து அதிகம்
ADDED : மே 12, 2025 10:43 PM

கோத்தகிரி,; கோத்தகிரி பகுதியில் தேயிலை கொள்முதல் நிலையங்களில், வரத்து அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில். நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில் மட்டும், மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 முதல், 24 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு மற்றும் இடு பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட செலவினங்களை கணக்கிட்டால், போதுமானதாக இல்லை.
இருப்பினும், கடந்த காலங்களை காட்டிலும், விவசாயிகளுக்கு ஓரளவு கட்டுப்படியான விலை கிடைத்து வருவது, ஆறுதலாக உள்ளது.
இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக, தேயிலை தோட்டங்களில், சிவப்பு சி லந்தி நோய் தாக்கம் அதிகரித்து வந்தாலும், தொடர்ந்து பெய்த மழை காரணமாக, மகசூல் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால், கோத்தகிரி பகுதியில் தேயிலை கொள்முதல் நிலையங்களில், வரத்து அதிகரித்து வருகிறது.