/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் குழிகளை மூட நெடுஞ்சாலைத்துறை புதிய முயற்சி; தினமலர் செய்தி எதிரொலி
/
சாலையில் குழிகளை மூட நெடுஞ்சாலைத்துறை புதிய முயற்சி; தினமலர் செய்தி எதிரொலி
சாலையில் குழிகளை மூட நெடுஞ்சாலைத்துறை புதிய முயற்சி; தினமலர் செய்தி எதிரொலி
சாலையில் குழிகளை மூட நெடுஞ்சாலைத்துறை புதிய முயற்சி; தினமலர் செய்தி எதிரொலி
ADDED : நவ 20, 2024 10:01 PM

பந்தலுார் ; பந்தலுார் பகுதியில் பழுதடைந்த சாலைகளை, சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
பந்தலுார் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில், தமிழக-கேரளா மாநிலங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் ஒரு சில பகுதிகளை சீரமைக்காமல் விடுபட்டதால் தற்போது சேதமடைந்து குழிகளாக மாறி உள்ளது.
இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவது உடன் அடிக்கடி பழுதடைந்தும் வருகிறது. இதனை சீரமைக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது.
அதன் பின், நெடுஞ்சாலைத்துறை மூலம் குழிகளில், ஜல்லி கற்கள் மற்றும் பாறை துகள்கள் கொட்டப்பட்டு சீரமைக்கும் பணி நடந்தது.
மழை வெள்ளத்தில் அவை அடித்து சென்ற நிலையில் மீண்டும் குழியாக மாறியது.
இதனை அடுத்து, புதிய முயற்சியாக, குளிர் கலவை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, 'ரோடு பாண்ட்' எனப்படும் ரெடிமேடு தார் கலவை கொண்டு வரப்பட்டு, சாலையில் உள்ள பள்ளங்களை சீர்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். சாலையில் உள்ள பள்ளங்களில், ஜல்லி கற்களை கொட்டி அதன் மீது ஆயில் தார் ஊற்றப்பட்டு, பின்னர் ரோடு பாண்டை அதன் மீது கொட்டி சமன் செய்கின்றனர்.
சாதாரண தார் சாலை போன்று ஒட்டிப்பிடித்து கொள்ளும் இந்த கலவை மூலம், சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டுனர்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர்.