/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெலிங்டன் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட நெடுஞ்சாலை பணி பயணிகளுக்கு நிழற்குடை இல்லாமல் அவதி

ADDED : டிச 09, 2024 04:38 AM
குன்னுார் : குன்னுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, கடந்த ஓராண்டிற்கு முன்பு வெலிங்டன் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதன்பிறகு நெடுஞ்சாலை துறையின் பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெலிங்டன் பகுதியின் இரு புறங்களிலும் நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள், மழை மற்றும் வெயிலில் சிரமப்படுகின்றனர்.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் முதியோர் என அனைவரும் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இந்த பகுதிகளில், 90 டிகிரி செங்குத்தாக மண் வெட்டப்பட்டு, ஒதுங்க கூட இடமில்லாததால், மழை மற்றும் வெயிலில் காத்திருந்து சிரமப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த பணிகளும் மேற்கொள்ள முன்வராததால், நிழற்குடை அமைக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு கன்டோன்மென்ட் வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.