/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர பாறாங்கற்களால் வாகன ஓட்டிகள் திணறல்: நெடுஞ்சாலை துறை அகற்ற வலியுறுத்தல்
/
சாலையோர பாறாங்கற்களால் வாகன ஓட்டிகள் திணறல்: நெடுஞ்சாலை துறை அகற்ற வலியுறுத்தல்
சாலையோர பாறாங்கற்களால் வாகன ஓட்டிகள் திணறல்: நெடுஞ்சாலை துறை அகற்ற வலியுறுத்தல்
சாலையோர பாறாங்கற்களால் வாகன ஓட்டிகள் திணறல்: நெடுஞ்சாலை துறை அகற்ற வலியுறுத்தல்
ADDED : அக் 26, 2025 11:14 PM

ஊட்டி: வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையோரத்தில் உள்ள பாறாங்கற்களை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியிலிருந்து ஆடாசோலை, தேனாடுகம்பை வழியாக அணிக்கொரை, கடநாடு, பெந்தட்டி, சின்னகுன்னுார், தொரைஹட்டி, கெங்கமுடி, துானேரி, கொதுமுடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு பஸ், தனியார் வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகிறது.
தவிர, இப்பகுதியை சுற்றி மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டிருப்பதால் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் செல்கிறது.
குறுகலான இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். விரிவாக்கத்தின் போது, சாலையில் பெரிய அளவிலான பாறாங்கற்கள் சாலையில் விழுந்தது. விழுந்த பாறாங்கற்களை நெடுஞ்சாலைத்துறையினர் உடைத்து அகற்றாமல் ஆங்காங்கே சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் கூறுகையில், '' சாலை விரிவாக்கம் வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சி அளிக்கிறது. விரிவாக்கத்தின் போது விழுந்த பாறாங்கற்களை சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளனர்.
எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல அடிக்கடி வாகனங்களை பின்னோக்கி நகர்த்த வேண்டிய நிலை உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி இச்சாலையில் ஆங்காங்கே சாலையோரத்தில் உள்ள பாறாங்கற்களை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும்.' என்றனர்.

