/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்டவாளத்தில் பாறை ஊட்டி மலை ரயில் ரத்து
/
தண்டவாளத்தில் பாறை ஊட்டி மலை ரயில் ரத்து
ADDED : நவ 04, 2024 03:44 AM

குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுாரில் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணி முதல் நள்ளிரவு வரை இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
பார்லியார் பகுதியில், 12.5 செ.மீ., மழை பதிவான நிலையில், குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே ஹில்குரோவ், ஆடர்லி உட்பட மூன்று இடங்களில் பாறைகள், கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன.
இதனால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை, 7:10 மணிக்கு புறப்பட வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. ஊட்டியில் இருந்து மதியம், 2:00 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தின் நடுவே உள்ள 'ரேக் பார்' சேதமானது.
பாறையை அகற்றி, ரேக் பார் மாற்றும் பணியில், ரயில்வே பொதுப்பணித் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல, குன்னுார் -- ஊட்டி இடையே ரயில் பாதையில், வெலிங்டன் அருகே மரம் விழுந்தது. ரயில்வே ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு காலை, 7:45 மணிக்கு புறப்படும் மலை ரயில் ஒரு மணி நேரம் தாமதமானது.