ADDED : மார் 18, 2024 11:35 PM
ஊட்டி;ஊட்டியில் இந்து முன்னணி கோவை கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நிர்வாகி ராயப்பன் கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதை திராவிட கட்சிகள் கைவிட வேண்டும்; தமிழகத்தில் போதை பொருகள் ஆக்கிரமித்திருப்பதை ஒடுக்க வேண்டும்; பாரத பிரதமருக்கு வாக்களிக்க வேண்டும்; வெள்ளலுார் அரசு குடியிருப்பு பகுதியில் வாழும் இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதை கண்டிப்பது; கோவை மற்றும் நீலகிரியில் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் மசூதி, சர்ச்சுகளை தடை செய்வது என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொது செயலாளர் அண்ணாதுரை, நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
